வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நாகையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு வலைவீச்சு;
வெளிப்பாளையம்:
நாகை காடம்பாடி, பச்சை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் முத்து (வயது30). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன், குமார். நேற்று முன்தினம் இரவு முத்து அவரது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த குமார் மற்றும் முருகன் முத்துவை வீட்டை விட்டு வெளியில் வருமாறு அழைத்தனர். இதனால் வௌியே வந்த முத்துவை திடீரென முருகனும், குமாரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த முத்து நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.