வாலிபருக்கு அரிவாள் வெட்டு

முத்தையாபுரத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

Update: 2022-07-28 13:23 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நயினார் (வயது 31). இவரது தங்கை அந்தப் பகுதியில் உள்ள குழாயில் குடிநீர் எடுக்க சென்றபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவசகாயம் மகன் அந்தோணி செல்வராஜ் (62) என்பவர்அவதூறாக பேசினாராம். இதனை ஆறுமுக நயினார் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தோணி செல்வராஜ், ஆறுமுக நயினாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆறுமுக நயினார் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்