கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி
துறையூர் அருகே ஆடுகளுக்கு தண்ணீர் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்தார்.
துறையூர் அருகே ஆடுகளுக்கு தண்ணீர் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்தார்.
மாணவி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் அஞ்சலி (வயது 16). இவர் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அஞ்சலி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் அஞ்சலி வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக அருகே அம்மையப்பன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
பிணமாக மீட்பு
இது குறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடிபார்த்தனர். சிறிதுநேர தேடலுக்கு பின் அஞ்சலி பிணமாக மீட்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.