காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை முயன்றார்.

Update: 2022-07-22 20:23 GMT

காதலிக்குமாறு மிரட்டல்

அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ராஜேஷ்(வயது 19). இவர் திருச்சி மாவட்டம், குமுளூர் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பெரம்பலூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவரிடம், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் அதிகாலை அந்த மாணவியின் செல்போனுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றுவிட்டு காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

மாணவர் கைது

இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர், இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர், தங்களது மகளை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாணவியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, ராஜேசை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்