ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட வேன் உரசியதால் சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட வேன் உரசியதால் சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-10-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட வேன் உரசியதால் சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விவசாய வேலைக்கு...

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள எப்போதும்வென்றான் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் சந்தன மாடசாமி (வயது 32). சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார்.

இவர் நேற்று காலை 8.30 மணிக்கு தனது டிராக்டரில் தாய் ராஜேஸ்வரி (60), அதே ஊரை சேர்ந்த மாடசாமி மனைவி கோமதி (50), செல்வபாண்டி மனைவி சரஸ்வதி (60) ஆகியோரை ஏற்றிக் கொண்டு மஞ்சநாயக்கன்பட்டி- ஏ.வேலாயுதபுரம் விலக்கு அருகில் விவசாய வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

2 பேர் பரிதாப சாவு

அப்போது பின்னால் வந்த எட்டயபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளிக்கூட வேன், டிராக்டரை முந்திச்செல்ல முயன்றது. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் வேன் உரசியது. இதனால் டிராக்டர் நிலை தடுமாறி சாலையோரத்தில இருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் சந்தன மாடசாமி, கோமதி ஆகிய இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அங்கு படுகாயங்களுடன் கிடந்த ராஜேஸ்வரி, சரஸ்வதி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விரைந்தனர்

மேலும், விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

டிராக்டரின் அடியில் சிக்கி உயிரிழந்த சந்தன மாடசாமி, கோமதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவத்தால், ஏ.வேலாயுதபுரம் கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியது. விபத்தில் பலியான சந்தன மாடசாமிக்கு முருகலட்சுமி என்ற மனைவியும், முகுந்த் என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர்.

இந்த விபத்தின் போது பள்ளிக்கூட வேனில் இருந்த மாணவ-மாணவிகள் எந்தவித காயங்களும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்