சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயர்ந்த செல்போனை நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்

சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயர்ந்த செல்போனை நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டினர்.;

Update:2023-03-30 12:12 IST

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சந்திரசேகர். இவரது மனைவி சத்யா. இருவரும் 28-ந் தேதி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது செல்போனை தவறவிட்டனர். இது குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் சாலையோரம் விலை உயர்ந்த செல்போன் கிடப்பதை பார்த்து அதை எடுத்து பெரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் செல்போனை தவறவிட்ட தம்பதியரை வரவழைத்த போலீசார் உரிய அடையாளம் பெற்று செல்போனை ஒப்படைத்தனர். விலையுயர்ந்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மகாலட்சுமியை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்