தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா
ஜோலார்பேட்டையில் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது.
தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா, ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான முதல் கட்டபோட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
நேற்று நடைபெற்ற கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அணியினருக்கு ஈசா கைப்பந்து போட்டி அணியினர் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், நடுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.