ரூ.25 லட்சம் மதிப்பில் காளை சிலையுடன் கூடிய ரவுண்டானா

திருவண்ணாமலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் காளை சிலையுடன் கூடிய ரவுண்டானாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Update: 2023-07-18 18:49 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.25 லட்சம் மதிப்பில் காளை சிலையுடன் கூடிய ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரவுண்டானாவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் ராதாகுமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்