பெரியார் சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
பெரியார் சிலை முன்பு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22) எம்.பி.ஏ. பட்டதாரி. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (19) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியார் கொள்கைகளை பின்பற்றி வரும் ரஞ்சித்குமார் பெரியார் ஆதரவாளர்களிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று மாலை ரஞ்சித்குமார்-ஜெயலட்சுமி ஆகிய இருவரும் பெரியார் ஆதரவாளர்கள் முன்னிலையில் மாலையை மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து ரஞ்சித்குமார், ஜெயலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.