வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. இங்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும். அப்போது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் அவர்கள் கிரிவலம் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கிரிவலம் செல்ல பாதை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.