வீடுகளின் தரைமட்டத்தை விட உயரமாக அமைக்கப்பட்ட சாலை

வேலூர் சி.எம்.சி. காலனியில் வீடுகளின் தரைமட்டத்தை விட உயரமாக அமைக்கப்பட்ட சாலையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-08-31 16:34 GMT

வேலூர் சி.எம்.சி. காலனியில் வீடுகளின் தரைமட்டத்தை விட உயரமாக அமைக்கப்பட்ட சாலையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

வீடுகளின் தரைமட்டத்தை விட...

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை அமைத்தல், கால்வாய் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்ளும் போது சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு உள்ளது. வாகனத்தை அகற்றாமல் சாலை அமைத்தல், அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்தல் போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கப்படுகிறது. சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி பகுதியில் வீடுகளின் தரைமட்டத்தை விட உயரமாக மற்றும் கால்வாய், தெரு அமைப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் இருந்து தெருவுக்கு வருவதற்காக அவர்களே செலவு செய்து படிக்கட்டுகளை அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகள் பள்ளத்தில் உள்ளதால் அவர்கள் பயன்படுத்தும் கார்களை பல மாதங்களாக வெளியே எடுக்க முடியாமல் உள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்கும் போது வீடுகளின் மட்டத்துக்கே அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேபோல, சி.எம்.சி. காலனி முதல் தெருவில் சிமெண்டு சாலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபாதை தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. அந்த தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. அதை மீண்டும் சரியாக பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்