பழுதான தொலைபேசியை சரி செய்ய வேண்டும்

பழுதான தொலைபேசியை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-10-05 18:31 GMT

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தொலைபேசி ஒரு மாத காலமாக வேலை செய்யவில்லை. இதனால் சாதாரண பாமர மக்கள் யாரும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அரசு துறை அதிகாரிகள் எந்தவித அரசு பணியையும் சம்பந்தப்பட்ட தொலைபேசி மூலம் வெளியில் தொடர்பு கொள்ளவும், அழைப்பினை பெறவும் முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட டெலிபோன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இணைப்பு அளிக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்