வட்டார அளவிலான கலை திருவிழா

சின்னசேலத்தில் வட்டார அளவிலான கலை திருவிழா நடந்தது.

Update: 2022-12-01 18:45 GMT

சின்னசேலம், 

வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் வட்டார அளவிலான கலை திருவிழா சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான மொழித்திறன், கட்டுரை, பேச்சு, தனிநபர் நடனம், குழு நடனம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு போட்டிகள் தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என 34 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

விழாவில் சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அன்புமணிமாறன், சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யாஜெய்கணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், கென்னடி, தலைமை ஆசிரியர்கள் சரவணன், ராஜலட்சுமி, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம், செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்