காட்பாடி
காட்பாடி திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் ஜங்காலபள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இன்று இவர் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் அருகே ஒரு அரிய வகை ஆந்தை இருந்தது.
அதனை பார்த்து அவர் காட்பாடி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரியவகை ஆந்தையை பிடித்தனர்.
பின்னர் அதனை கிறிஸ்டியான் பேட்டை காப்புக்காட்டில் விட்டனர்.