பூத்து குலுங்கும் அரிய வகை பூ மருது மரம்

பூத்து குலுங்கும் அரிய வகை பூ மருது மரம்

Update: 2022-06-24 16:41 GMT

மன்னார்குடி:

மலையடிவார பகுதியில் மட்டும் அதிகமாக காணப்படும் அரிய வகை மரம் பூ மருது. மிதமான தட்பவெட்ப நிலையில் வளரக்கூடியது. சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடிய குறுவகை மர வகையாகும். இந்த பூ மருது மரம் அடர் கத்தரிபூ நிறத்தில் 2 அங்குல நீளத்திற்கு கொத்து கொத்தாக நெருக்கமாக பூக்கும். பொதுவாக ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பூக்கள் நிறைந்து காணப்படும்.

மன்னார்குடி பசுமைக்கரங்கள் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மன்னார்குடி மன்னை நாராயணசாமி நகரில் சாலையோரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில் ஒரு சில பூ மருது மரக்கன்றுகளும் அடங்கும். தற்போது 8 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த மரக்கன்றுகள் முதல் முறையாக பூக்கத்தொடங்கி உள்ளன. கிளைகளில் அடர்த்தியாக பூக்கள் நிறைந்து பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டு பரவசப்படுத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்