ஆ.ராசா எம்.பி. மீது ஏரல்போலீசாரிடம் பாரதீய ஜனதா கட்சியினர் புகார்

ஆ.ராசா எம்.பி. மீது ஏரல் போலீசாரிடம் பாரதீய ஜனதா கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-16 18:45 GMT

ஏரல்:

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏரல் ஒன்றிய தலைவர் கே.டி.ராஜகோபால் தலைமையில் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணியிடம் புகார் மனு கொடுத்தனர். அப்போது மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், மாவட்ட செயலாளர் வீரமணி, அரசு தொடர்பு பிரிவு செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய பொது செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய துணைத்தலைவர்கள் சரவணன், மகாலட்சுமி மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகர் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்