சாலை விபத்தில் கல்குவாரி தொழிலாளி பலி

க.பரமத்தி அருகே சாலை விபத்தில் கல்குவாரி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் புகார் மனு ெகாடுத்தார்.

Update: 2022-10-07 18:47 GMT

தொழிலாளி பலி

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அல்லாளி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 55). இவர் க.பரமத்தி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 21-ந்தேதி வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வள்ளிபுரம் பிரிவு அருகே வந்தபோது நிலைதடுமாறி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து க. பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாவில் சந்தேகம் என புகார்

இந்தநிலையில் நேற்று வேலுசாமியின் மகன் சுரேஷ் தனது குடும்பத்தினருடன் கரூர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது தந்தை வேலுசாமி கடந்த 10 ஆண்டுகளாக க.பரமத்தியில் உள்ள ஒரு கல்குவாரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி எனது தந்தை விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக க.பரமத்தி போலீசார் எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்கள். மேலும் எந்த விதமான விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் எனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்