குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-05-09 19:02 GMT

அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டி குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்