குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
காரையூர் அருகே உள்ள கூடலூரில் குடியிருப்பு பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.