இரவிபுதூரில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
இரவிபுதூரில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
சுசீந்திரம்,
இரவிபுதூரில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
பிடிபட்டது
இரவிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எம்.நகர் குடியிருப்பில் ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து இரவிபுதூர் ஊராட்சி தலைவர் தேவி பெருமாள் மூலம் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனக்காப்பாளர் பிரவீன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டார்.