வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது .

Update: 2022-12-31 18:21 GMT

பொன்னமராவதி ஒன்றியம், தூத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் சிவாஜி கணேசன். இவரது வீட்டின் வளாகத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ராமையா என்பவர் இதுகுறித்து உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்