கன்னியாகுமரி அருகே தென்னந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
கன்னியாகுமரி அருகே தென்னந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
கன்னியாகுமரி அருகே தென்னந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
மலைப்பாம்பு பிடிபட்டது
கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தில் தென்னந்தோப்பில் மலைப்பாம்பு ஒன்று புகுந்திருந்ததை அந்த பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் பார்த்துள்ளார். பின்னர் அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் முத்துராமலிங்கம், வனக்காவலர் ஜோயல், வேட்டைத் தடுப்புக் காவலர் சிவகுமார் ஆகியோர் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். பின்னர் அடர்ந்த காட்டு பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.