வத்தலக்குண்டு அருகே மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு

வத்தலக்குண்டு அருகே மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2023-10-22 21:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது வீட்டின் அருகில் வைகை ஆற்றின் கரையோரம் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை பாலமுருகன் மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கொட்டகையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்