அம்மையநாயக்கனூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு

அம்மையநாயக்கனூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-10-14 16:26 GMT

கொடைரோடு அருகே ஏ.புதூரில் தனியார் வணிக வளாக கட்டிடம் உள்ளது. நேற்று இரவு இந்த கட்டிடத்தின் அருகில் மலைப்பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த சிலர், மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், அங்கு செடிகொடிகளுக்குள் கிடந்த 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு அந்த பாம்பை நிலக்கோட்டை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர். 


Tags:    

மேலும் செய்திகள்