மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

நித்திரவிளை அருகே தாமிரபரணி ஆற்றில் மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

Update: 2022-11-29 18:45 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே தாமிரபரணி ஆற்றில் மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

நித்திரவிளை அருகே உள்ள வைக்கல்லூர் பகுதியில் தாமிரபரணியாறு பாய்கிறது. இந்த ஆற்றில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் கிடந்தது. அப்போது அங்கு மாடுகளை மேய்க்க சென்ற ஒரு வாலிபர் கைகளை கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது, மீனுக்கு வீசப்பட்ட வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இதுபற்றி களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வலையில் சிக்கி கிடந்த பாம்பை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குளிக்கும் ஆற்றில் மலைப்பாம்பு கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்