பொன்னை ஆற்றில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்க திட்டம்

சோளிங்கர் அருகே பொன்னை ஆற்றில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

Update: 2023-06-20 18:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த இரண்டாடி ஊராட்சியில் உள்ள எரிமூன்னுர் பகுதியில் பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் இல்லாமல் 40 ஆண்டு காலமாக பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து சோளிங்கர் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.பூர்ணசந்திரன் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரி சேரலாதன் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக பாலம் கட்டும் பணிக்கு 25 லட்ச ரூபாய் வரை நிதி ஒதுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைந்தால் அப்பகுதி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் சுடுகாட்டிற்கு செல்ல வசதியாக இருக்கும். மேலும் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கக்கூடிய முக்கிய மேம்பாலமாகவும் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்