தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருநகரி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருநகரி ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு, தூய்மை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கையுறை, மண்வெட்டி, தட்டு, முக கவசம், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் வழங்கினார். அப்போது ஊராட்சி செயலர் தனராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.