விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-01-04 18:45 GMT

தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் நவீன்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்