சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை வழி அனுப்பும் நிகழ்ச்சி

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-27 21:01 GMT

சூரமங்கலம்:

காசி தமிழ் சங்கமம் விழாவுக்கு கோவையில் இருந்து புறப்பட்டு வாரணாசி செல்லும் எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (22669) சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 7.20 மணிக்கு வந்தது. சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், பா.ஜனதாவினர் ரெயிலை வரவேற்றனர். காசி தமிழ் சங்கமம் செல்லும் 44 பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ், மண்டல தலைவர்கள் பாலமுருகன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்