முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்

Update: 2022-07-28 16:34 GMT
ஆடி மாதம் வரும் அமாவாசையன்று கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.அந்தவகையில் ஆடி அமாவாசையான நேற்று மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் காலை முதலே பொதுமக்கள் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தர்ப்பணத்தில் பசும்பால், தேன், நெய், எள் மற்றும் காய்கறிகள் வைத்து வழிபாடு நடத்தினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கமாக தர்ப்பணம் செய்யப்படும் துலா கட்ட காவிரி வடக்குப்புற கரையில் தர்ப்பணம் செய்ய கடந்த ஆண்டு முதல் தற்போது வரை அனுமதிக்கப்படவில்லை. இதனால், காவிரியின் தென்கரையில் மட்டுமே ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்