சாலையை சீரமைக்கக்கோரி இருசக்கர வாகன ஊர்வலம்

சாலையை சீரமைக்கக்கோரி இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-19 18:32 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்சுருட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து இருசக்கர வாகன ஊர்வலத்தை மாநில துணை தலைவர் வீராசாமி தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊர்வலம் குண்டவெளி, அழகர்கோவில், வெத்தியார்வெட்டு வழியாக சென்று கல்லாத்தூர் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. அந்த கிராமங்களில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்