கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம்

கூடலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம் சென்றனர்.

Update: 2022-08-19 14:09 GMT

கூடலூர், 

கூடலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம் சென்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

ராதை வேடம்

ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர். தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்