தடையை மீறி ஊர்வலம்; 300 பேர் மீது வழக்குப்பதிவு

தேன்கனிக்கோட்டையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-11 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ராமஜென்ம பூமி ரத ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். அதனை நினைவு கூறும் வகையில் விஷ்வ இந்து பரிசத் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. அப்படி இருந்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோட்டை வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

300 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் தடை மீறி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி விஷ்வ இந்து பரிசத் நகர தலைவர் வெங்கடேஷ், தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், மாவட்ட தலைவர் தேவராஜ், வட தமிழக அமைப்பாளர் ராமன், ஆர்.எஸ்.எஸ். தென்பாரத பொறுப்பாளர் ஆறுமுகம் உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்