சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

Update: 2022-09-18 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சோழ மண்டல அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 440 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டி 9, 11, 13, 15, 19 ஆகிய வயதுடைவருக்கும் மற்றும் பொதுப்பிரிவினருக்கும் நடத்தப்பட்டது. போட்டியை வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடங்கி வைத்தார். மாநில சதுரங்க கழக இணைச் செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரண்யம் வட்டார சதுரங்க கழக செயலாளர் மணிமொழி வரவேற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்