சாலையின் மைய தடுப்பில் மோதிய தனியார் பஸ்

நத்தம் அருகே சாலையின் மைய தடுப்பில் தனியார் பஸ் மோதியது. இதில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-10-18 16:47 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டி பகுதியில் பஸ் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதிய பஸ், அதன்மீது ஏறி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி கடும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் தொட்டிமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 55), மகாலிங்கம் (43), லாவண்யா (23), காரைக்குடியை சேர்ந்த முருகேசன் (63), ராஜேஸ்வரி (38), கிருஷ்ணவேணி (21) உள்ளிட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு, நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்