பயணிகளை ஏற்றுவதில் மோதல்: அரசு பஸ் கண்டக்டருக்கு அடிஉதை

தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-26 09:25 GMT

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பஸ் டிரைவர்களுக்கு இடையே போட்டி நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தஞ்சை தொம்பன் குடிசை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளது. அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் டிரைவர் அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி விட்டு பஸ்சில் இருந்து இறங்கி வந்து அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சமாதானம் படுத்திய அரசு பஸ் டிரைவரை தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விரட்டி சென்று நடுரோட்டில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் இரு பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்  கண்டக்டரை நடு ரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்