அலங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகத்தடையில் தவறி விழுந்து கர்ப்பிணி பலி

அலங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகத்தடையில் தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-12-13 20:13 GMT

அலங்காநல்லூர்,


அலங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகத்தடையில் தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

5 மாத கர்ப்பிணி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த அய்யூர் கிராமத்தை சேர்ந்த நாகூர் பிச்சையின் மகள் இர்பானா பானு (வயது22). இவருக்கும் ஒத்தக்கடையை சேர்ந்த சாதிக் அலி (28) என்பவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இர்பானா பானு தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அய்யூரில் இருந்து அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு, தனது கர்ப்பிணி மனைவியை சாதிக்அலி மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது பின்னால் அமர்ந்து இருந்த இர்பானாபானு எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே தவறி விழுந்தார். இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர்.

விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் மருதமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். கர்ப்பிணியின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்