ரெயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-17 20:08 GMT

3 மாத கர்ப்பிணி

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் இந்திராகாலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி காயத்ரி (வயது 25). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

மாரிமுத்துவின் பெற்றோர் காயத்ரியிடம், தனது 2-வது மருமகள் அதிக சீர்வரிசையுடன் வந்துள்ளதாகவும், ஆனால் அவருக்கு அவரது தாய கொஞ்சமாக சீர்வரிசை கொடுத்துள்ளதாகவும் அடிக்கடி சொல்லிக்காட்டியதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து மாயம்

தற்போது காயத்ரி 3 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருடைய தாய் உதவிக்கு இருந்து பார்க்கவில்லை என்று 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் சத்தம்போட்டதாக தெரிகிறது. இதனால் காயத்ரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த காயத்ரி திடீரென மாயமானார்.

இதனால் மாரிமுத்து மற்றும் அவருடைய உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். மேலும் காயத்ரியின் சகோதரி அகிலாண்டேஸ்வரிக்கு போன் செய்து அவர் அங்கு வந்துள்ளாரா? என்று மாரிமுத்து கேட்டுள்ளார். அங்கும் அவர் செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டின் பின்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தேடியுள்ளனர்.

தற்கொலை

அப்போது, அவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி, அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கோட்டாட்சியர் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து காயத்ரியின் தாய் செந்தில்குமாரி கொடுத்த புகாரின்பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், காயத்ரிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் திருச்சி கோட்டாட்சியர் தவச்செல்வமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்