ஆன்லைன் சூதாட்டத்தால் கடனில் சிக்கிய அனல்மின்நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கிய வாலிபர் கடனில் சிக்கியதால் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-26 20:56 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பூபதிராஜா (வயது 27). எலக்ட்ரீசியனான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குளத்தூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த பூபதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பூபதிராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்

போலீசாரின் விசாரணையில், பூபதிராஜா செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியதும், இதில் பணத்தை இழந்ததால் பலரிடம் கடன் பெற்று விளையாடியதும் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பூபதிராஜா தனது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் உருக்கமாக பேசிய ஆடியோவை தாயாருக்கு அனுப்பி உள்ளார்.

அதில் மகராஜன் பேசுகையில், ''ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக பலரிடம் கடன் வாங்கி விட்டேன். தாயாரின் தங்க சங்கிலியையும் ரூ.40 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளேன். இந்த மாத சம்பளத்தையும் செலவு செய்து விட்டேன். என்னை மன்னிச்சிடும்மா'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்