வாகனம் மோதி உடைந்து விழுந்த மின்கம்பம்

வடமதுரை அருகே வாகனம் மோதியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது.

Update: 2023-09-10 19:45 GMT

வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியில் இருந்து சித்துவார்பட்டி செல்லும் சாலையில் கோப்பம்பட்டி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் அந்த மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பத்தை ஊன்றினர். அதன்பிறகு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை மின்வாரிய இளநிலை பொறியாளர் (பொறுப்பு) மதனீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்