எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் - மதுரையில் திடீர் பரபரப்பு

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Update: 2022-09-29 02:56 GMT

கோப்புப்படம் 

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் கூட்டமைப்பு என்ற பெயரில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

115 சாதிகளை வஞ்சித்து விட்டு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதாக குற்றம் சாட்டி, ஊருக்குள் வராதீர் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுபோல, விருதுநகர் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் கூட்டமைப்பு என்ற பெயரில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், 115 சாதிகளை வஞ்சித்து விட்டு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதாக குற்றம் சாட்டி, ஊருக்குள் வராதீர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்