சேலம் மத்திய சிறையில் போலீஸ்காரரின் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு

சேலம் மத்திய சிறையில் போலீஸ்காரரின் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-18 20:53 GMT

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆயுதப்படை போலீசார் 4 பேர் கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்காக சிறைக்கு வந்தனர். அப்போது போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்தது. துப்பாக்கியை வானத்தை நோக்கி வைத்திருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறையில் துப்பாக்கி திடீரென வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சத்தம் கேட்டு கைதிகள் பீதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்