திருச்சி: பணிக்கு சென்ற காவலர் மாரடைப்பால் பலியான சோகம்!
திருச்சி அருகே பணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் பழையூர் மேடு கிழக்கு பகுதியை சேர்த்தவர் பெரியசாமி. இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வாத்தலை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 10:30 மணியளவில் வாத்தலை காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்வதற்காக தன்னுடைய பைக்கில் சென்றுள்ளார்.
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மயக்கம் வருவதுபோல் இருந்ததால், தன்னுடைய வாகனத்தை விட்டு இறங்கியவர் மயக்கம் அடைந்தார். ராமகிருஷ்ணன் கீழே விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பேட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.