விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-11-11 07:59 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்