பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து
வண்டலூரில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கில் ராஜ் (வயது 18). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மைக்கில் ராஜ் நேற்று முன்தினம் மலையடி நகரில் உள்ள சமுதாய கூடத்தின் அருகே அமர்ந்து இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மைக்கில் ராஜ் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் மயங்கி கீழே விழுந்த மைக்கில் ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.