அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-07 18:58 GMT

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 282 மனுக்கள் பெறப்பட்டது.

விளையாட்டு திடல்

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

பாணாவரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்பனா தலைமையில், துணைத்தலைவர் தவமணி மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பள்ளிக்கு சுற்றுசுவா் அமைத்திட வேண்டும், கழிவறையை சீரமைத்து, மேலும் புதிய கழிவறை அமைத்திட வேண்டும், பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் புதா்களை அகற்ற வேண்டும், பள்ளி அருகாமையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை அகற்றி, மாணவிகளுக்கு விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்