அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

Update: 2022-09-04 17:22 GMT

தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி  அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள், நலத்திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஏராளமான புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்