விற்பனைக்காக போதை மாத்திரை கலந்த கள் வைத்திருந்தவர் கைது

விற்பனைக்காக போதை மாத்திரை கலந்த கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-16 19:32 GMT

தா.பழூர்:

போதை மாத்திரை கலந்த கள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 58). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி, அதில் போதை மாத்திரை கலந்து விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மதியழகனின் வயலில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது 2 பானைகளில் பனை கள் இறக்கி, அதில் போதை மாத்திரை கலந்து வைத்திருந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து பானைகளில் வைக்கப்பட்டிருந்த கள், போலீசாரால் அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதியழகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்