கடையில் பணம் திருடியவர் கைது
கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே கீழதாழையூத்து சர்ச் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 19). இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பொருட்கள் போட வந்த தாழையூத்து நாராயணன் நகரை சேர்ந்த பீட்டர் (48) என்பவர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பீட்டரை கைது செய்தனர்.