கிளினிக்கில் திருடியவர் கைது
வேப்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள கிளினிக்கில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
ராமநத்தம்
வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் கிளினிக்கில் இரும்பு ஷட்டரை உடைத்து ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கிளினிக்கில் பணத்தை திருடியவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்லதுரை(வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மீதி ரூ.12 ஆயிரத்தை செலவழித்து விட்டதாக செல்லதுரை போலீசாரிடம் தெரிவித்தார்.